Jacto-Geo Protest for the minimum wage is Rs. 9 thousand demanding in Perambalur

பெரம்பலூர்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க போராட்டம் இன்று பெரம்பலூர் மேற்குவானொலி திடல் அருகே நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர்கள் ஆளவந்தார், கணேசன், அருள்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர். பொறுப்பாளர்கள் துரைசாமி, குமரிஆனந்தன், தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

தொடர்ந்து பொறுப்பாளர்கள் கலியமூர்த்தி, மகேந்திரன், மரியதாஸ், சுசிக்குமார், அன்பழகன், பாரதிவளவன் உட்பட பலர் பேசினர். இதில் உச்சரம்பின்றி ஒருமாத ஊதியம் போனஸாக அனைவருக்கும் வழங்கவேண்டும், புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்தவேண்டும்,

21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்கவேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்ப்புறநூலகர், பகுதிநேர மற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. முடிவில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!