Jallikattu withdraws protest: 10 people arrested after roadblock
perambalur-palakkarai-collector-arch
பெரம்பலூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்: மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு திரும்பினர். சாலைமறியல் செய்த இளைஞர்கள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்

ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்னும் தீர்ப்பு வழங்காததால் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் வெகுண்டு எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, கடந்த புதன்கிழமை டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறுநாள் இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு சட்ட ரீதியாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று அவரிடம் பிரதமர் உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஜல்லிக் கட்டு நடத்தும் வகையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்து அவசர சட்டம் ஒன்றை நேற்று முன்தினம் கொண்டு வந்தது. இதனையடுத்து தமிழகத்தில் ஒருசில இடங்களில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. ஆனால் இதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நிரந்தர சட்டம் கொண்டு வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறிவிட்டனர். வரைவு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் சட்டமாக்கப்படும் என அரசு பலமுறை விளக்கம் அளித்தது. ஆனால் போராட்டம் கைவிடப்படவில்லை.

இதனையடுத்து நேற்றிரவு முதலலே பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் போராட்டம் நடத்திய மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என போராட்டக்காரர்களை காவல்துறையினர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். வன்முறை எதுவும் ஏற்படாத வண்ணம் போலீசார் இளைஞர்களை வெளியேற கேட்டுக் கொண்டனர். முதலில் பெண்கள், குழந்தைகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். போராட்டக்குழு வினர் அறிவித்தன் பேரில் படிப்படியாக கொத்து கொத்தாக உண்மையான மாணவர்கள் போராட்டக்ககளத்தில் வெளியேறினர். மேலும், பெற்றோர்கள் தங்களது மகன், மகளை வரிசையாக வந்து அழைத்து சென்றனர், பலர் போன் மூலம் வீடுகளுக்கு வரவழைத்தனர். போராட்ட களத்தில் மாணவர்கள் அல்லாத இளைஞர்கள் திரண்டு இருந்தனர். அவர்களை போலீசார் அவர்களை அமைதியான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி வெளியேற்றினர்.

இதே போன்று மற்றொரு அமைப்பான தமிழ் இன உணர்வாளர்கள் என்ற அமைப்பினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால், கலைந்து செல்லாமல் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நிரந்தர சட்டம் கொண்டு வர கோஷமிட்டு சாலைமறியலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரம்பலூரில் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. போராட்டத்தை வேறு திசைக்கு திருப்ப முயன்ற மாணவர்கள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து வந்த இளைஞர்களை அடையாளம் கண்ட போலீசார் தகுந்த ஆலோசனை கூறி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!