Jallikkattirku Support: 2nd day of protest about 5 thousand college students
jallikattu-perambalur
பெரம்பலூரில் 2வது நாளாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து இன்று சுமார் 5 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் களம் இறங்கினர்.

பெரம்பலூரில் ஜல்லிக்கட்டை ஆதரித்தும், பீட்டாவை தடை செய்யக்கோரியும் சுமார் 5 ஆயிரத்திற்கும் அரசு மற்றும், தனியார் கலை, அறிவியல் , பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இன்றும் 2வது நாளாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து அறப்போராட்டம் நடத்தினர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரியும், இந்தியாவில் பீட்டா அமைப்பை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை கடுமையாக எழுப்பினர். காலை 10 மணி முதலே நடந்து வரும் போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட போலீசார் அசம்பாவிதம் ஏதும் நடக்காத வகையில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக 3 கிமீ தூரம் பேரணியாக நடந்து வந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் , சங்குப்பேட்டை, வழியாக முக்கிய வீதிகள் வழியாக கோஷமிட்டடாவாறே பாலக்கரை வந்தடைந்தனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் :

பெரம்பலூர் நகரில் 2வது நாளாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளியில் 10 வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்தவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரியும், இந்தியாவில் பீட்டா அமைப்பை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை கடுமையாக எழுப்பினர். பள்ளி நுழைவு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

பிணம் போன்று வேடமிட்டு போராட்டம்:
jallikattu-perambalur

jallikattu-peta-body
பெரம்பலூரில் பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சடலமாக வேடமிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தினர
பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் பீட்டா என்ற அமைப்பு இறந்தது போன்றும் சடலமாக வேடமிட்டும், காலணி வைத்த அவமரியாதை செய்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முதல் தமிழகம் முழுவதும் பலவிதமான போராட்டங்களை பீட்டா அமைப்பை கண்டித்தும், தடை செய்ய வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரியும் பல விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முதல் அறப்போராட்டம் நடத்தி இளைஞர்கள் இன்று காலை முதல் பீட்டா அமைப்பை இறந்தது போன்று தோற்றம் ஏற்படுத்தும் வகையில் இறந்த சவம் போன்று வேடமிட்ட இளைஞர்கள் காலணியில் பீட்டா என பெயர் எழுதி அதற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் மேலும் பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வகையிலும் உள்ளதால் பொதுமக்கள் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பின்னர், நாயிடம் மனு கொடுத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!