Jamabandi begins on 29th in Namakkal district: Collector
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி ஜமாபந்தி துவங்குகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
நாமக்கல் மாவட்டத்தில் ஜமாபந்தி வரும் 29ம் தேதி துவங்கி ஜூன் 12ம் தேதி முடிவடைகிறது. நாமக்கல் வருவாய் வட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வருவாய் தீர்வாய அலுவலராக பொறுப்பு வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதற்கான தீர்வினை அளிக்க உள்ளார்.
சேந்தமங்கலம் வருவாய் வட்டத்தில் ஜமாபந்திக்கு வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் பர்ஹத் பேகமும், ராசிபுரத்தில் நடைபெறும் ஜமாபந்திக்கு வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கண்ணனும்,
கொல்லிமலையில் நடைபெறும் ஜமாபந்திக்கு வருவாய் தீர்வாய அலுவலராக நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார்பதியும், திருச்செங்கோட்டிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமியும்,
குமாரபாளையத்திற்கு வருவாய் தீர்வாய அலுவலராக திருச்செங்கோடு ஆர்டிஓ பாஸ்கரனும், பரமத்தி வேலூரில் நடைபெறும் ஜமாபந்திக்கு வருவாய் தீர்வாய அலுவலராக சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் துரையும் செயல்படுவார்கள்.
ஜமாபந்தி அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடைபெறும். இதுகுறித்த குறித்த விவரம் சம்பந்தபட்ட தாசில்தார் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தந்த கிராமத்துக்கு ஒதுக்கப்பட்ட நாளில், ஜமாபந்தியில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.