பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் 1426 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம்(ஜமாபந்தி) இன்று 23.05.17 துவங்கி நடைபெற்றது.

ஆலத்தூர் வட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.நந்குமாரும் , வேப்பந்தட்டை வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரனும், குன்னம் வட்டத்திற்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் புஷ்பவதியும், பெரம்பலூர் வட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) துரையும் வருவாய்த்தீர்வாய அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்த வருவாய்த் தீர்வாயம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து வட்டங்களிலும் 383 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 165 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 168 மனுக்கள் உரிய விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய தீர்ப்பாயத்தில் ஆலத்தூர் வட்டத்தில் செட்டிக்குளம் உள்வட்டத்திற்குட்பட்ட நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், மாவிலங்கை, சிறுவயலூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி, து.களத்தூர், புது அம்மாபாளையம், கண்ணப்பாடி, தேனூர், இரூர், பாடாலூர் (மேற்கு), பாடாலூர் (கிழக்கு), ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

வேப்பந்தட்டை வட்டத்தில் வெங்கலம் உள்வட்டத்திற்கு உட்பட்ட உடும்பியம், பூலாம்பாடி (கிழக்கு), பூலாம்பாடி (மேற்கு), வெங்கனூர், தழுதாழை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை (மேற்கு), தொண்டமாந்துறை (கிழக்கு), வெங்கலம் (மேற்கு), வெங்கலம் (கிழக்கு), வேப்பந்தட்டை (வடக்கு), வேப்பந்தட்டை (தெற்கு), வெண்பாவூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய்த்தீர்ப்பாயம் நடைபெற்றது.

மேலும், பெரம்பலூர் வட்டத்தில் குரும்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட குரும்பலூர் (தெற்கு), குரும்பலூர் (வடக்கு), மேலப்புலியூர் (கிழக்கு), மேலப்புலியூர் (மேற்கு), லாடபுரம் (மேற்கு), லாடபுரம் (கிழக்கு), அம்மாபாளையம், களரம்பட்டி, சத்திரமனை ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

குன்னம் வட்டத்தில் வடக்கலூர் உள்வட்டத்திற்குட்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம்(வடக்கு), பெண்ணகோணம்(தெற்கு), வடக்கலூர், ஒகளூர்(மேற்கு), ஒகளூர்(கிழக்கு), சு.ஆடுதுறை, அத்தியூர்(வடக்கு), அத்தியூர்(தெற்கு), கிழுமத்தூர்(வடக்கு), கிழுமத்தூர்(தெற்கு), அகரம்சிகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய்த்தீர்ப்பாயம் நடைபெற்றது.

நாளை (24.5.2017) ஆலத்தூர் வட்டத்தில் கொளக்காநத்தம் உள்வட்டத்திற்கு உட்பட்ட கொட்டரை, சாத்தனூர், சிறுகன்பூர் (கிழக்கு), சிறுகன்பூர் (மேற்கு), வரகுபாடி, காரை (கிழக்கு), காரை (மேற்கு), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு), கொளத்தூர் (கிழக்கு), ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

வேப்பந்தட்டை வட்டத்தில் பசும்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட பெரிய வடகரை, நூத்தப்பூர் (தெற்கு), நூத்தப்பூர் (வடக்கு), பில்லாங்குளம், கை.களத்தூர் (மேற்கு), கை.கள்த்தூர் (கிழக்கு), காரியனூர், பசும்பலூர் (வடக்கு), பசும்பலூர் (தெற்கு), பாண்டகப்பாடி, திருவாளந்துரை, அகரம், ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

பெரம்பலூர் வட்டத்தில் குரும்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட பொம்மனப்பாடி, வேலூர் மற்றும் பெரம்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட எசனை, ஆலங்கிழி, கீழக்கரை, எளம்பலூர், செங்குணம், துறைமங்கலம், பெரம்பலூர் (தெற்கு), பெரம்பலூர் (வடக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

குன்னம் வட்டத்தில் கீழப்புலியூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட நன்னை (கிழக்கு), நன்னை (மேற்கு), பெருமத்தூர் (வடக்கு), பெருமத்தூர் (தெற்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப்புலியூர் (தெற்கு), எழுமூர் (மேற்கு), மழவராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), ஆண்டிக் குரும்பலூர், அசூர், சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய்த் தீர்ப்பாயம் நடைபெறும்.

அதே போல, 25.5.2017 அன்று ஆலத்தூர் வட்டத்தில் கூத்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட தொண்டடபாடி, மேலமாத்தூர், அழகிரிபாளையம், ஆதனூர் (வடக்கு), ஆதனூர் (தெற்கு), கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், திம்மூர், சில்லக்குடி (தெற்கு), சில்லக்குடி (வடக்கு), ஜெ.ஆத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

வேப்பந்தட்டை வட்டத்தில் வாலிகண்டபுரம் உள்வட்டத்திற்கு உட்பட்ட தொண்டபாடி, நெய்குப்பை, அனுக்கூர், பிரம்ம தேசம், மேட்டுப்பாளையம் (தெற்கு), மேட்டுப்பாளையம் (வடக்கு), பிம்பலூர், வி.களத்தூர், பேரையூர், எறையூர், தேவையூர் (வடக்கு), தேவையூர் (தெற்கு), வாலிகண்டபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

பெரம்பலூர் வட்டத்தில் பெரம்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட அரணாரை (வடக்கு), அரணாரை (தெற்கு), புதுநடுவலூர், சிறுவாச்சசூர், நொச்சியம், கல்பாடி (வடக்கு), கல்பாடி (தெற்கு), அயிலூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

குன்னம் வட்டத்தில் வரகூர் உள்வட்டத்திற்குட்பட்ட ஓலைப்பாடி (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), பரவாய் (மேற்கு), பரவாய் (கிழக்கு), புதுவேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு), காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு), கொளப்பாடி, வரகூர், குன்னம், பெரியம்மாபாளையம், பெரிய வெண்மணி (மேற்கு), பெரிய வெண்மணி (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய்த் தீர்ப்பாயம் நடைபெறவுள்ளது.

இந்த வருவாய் தீர்வாயங்களின் இறுதி நாளான 25.05.17 அன்று சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குடிகள் மாநாடு அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெறும். எனவே பொதுமக்கள் இந்த வருவாய் தீர்வாயங்களில் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!