Jayalalithaa will conduct a CBI inquiry into the mysterious death: MP maruthaiaraja Urges

பெரம்பலூரில் அதிமுகவின் (ஓபிஎஸ் அணி) ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நான்கு ரோடு அருகே உள்ள எம்.எஸ்.ஆர்., ஸ்டார் ஹோட்டலில் நடந்தது.

மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜாராம் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பூவைசெழியன், முன்னாள் எம்எல்ஏ பிச்சைமுத்து, முன்னாள் யூனியன் சேர்மன் கிருஷ்ணகுமார், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், அரும்பாவூர் நகர செயலாளர் ரெங்கராஜ், கீழப்புலியூர் பத்ரா செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த பெரம்பலூர் ஒன்றிய செயலாளரும் எம்.பியுமான மருதைராஜா பேசியதாவது :

முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தை அவமதிக்கும் செயலில் சசிகலா ஈடுப்பட்டார். திமுக குடும்ப அரசியலை எதிர்த்து தான் ஜெயலலிதா அரசியல் செய்தார். ஆனால் தற்போது ஜெ. இறந்த பிறகு அதிமுகவில் குடும்ப அரசியல் தலைதூக்கியுள்ளது. சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் தான் அதிமுக உள்ளது. இந்த குடும்ப அரசியல் ஒழியவேண்டும். அதற்காக தான் அதிமுக பொருளாளர் பன்னீர் செல்வம் தலைமையில் உண்மையான அதிமுக இயங்கி வருகிறது. ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஜெ.மர்ம மரணத்திற்கு விசாரணை நடத்த கோரி வரும் 8ம்தேதி பெரம்பலூரில் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது என தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதென மக்கள் கருதுவதை தெளிவுப்படுத்திட சிபிஐ விசாரணை மற்றும் மத்திய அரசு விசாரணை நடத்த உத்தரவிட ஜனாபதியை கேட்டுக்கொள்வது, ஜெ. மறைவுக்கு பின்னர் கட்சியை கைப்பற்ற விதிமுறைகளுக்கு மாறாக தற்காலிகாக பொதுச் செயலாளராக நியமனம் செய்து கொண்ட சகிலாவின் நியமனத்தை ரத்து செய்யதிடவும், சசிகலாவால் நியமனம் மற்றும் நீக்கம் செய்யப்பட்ட பதவிகளை செல்லாது என அறிவிக்ககோரியும் இந்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்வது, ஜெ. அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து செயல்பட அழைப்பது, ஜெ. நல்லாட்சியை தமிழகத்தை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைத்திட பாடுபடுவோம், ஜெ. மர்ம மரணத்திற்கு விசாரணை நடத்தக்கோரி வரும் 8ம்தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை எதிர்புறம் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அதிகளவில் கலந்துகொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் மன்ற பொருளாளர் பாடாலூர் வேல்முருகன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!