Kalaigar Karunanidhi Memorial Day: DMK pays floral tributes at Poolampadi!
முன்னாள் முதமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு, பூலாம்பாடி பேரூர் திமுக சார்பில் மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் நினைவஞ்சலி செலுத்தினர். அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி பேரூரில் திமுகவினர் நினைவஞ்சலி நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக மேற்கு மந்தைவெளியில் இருந்து பேருந்து நிலையம் வரை திமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதி ஊர்வலம் சென்றனர். பின்னர் திமுக கொடிக்கம்பம் அமைந்துள்ள இடத்தில் கலைஞர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு அனைவரும் மாலைஅணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.
பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி செங்குட்டுவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்ணகி கருப்பையா, கலைச்செல்வி பாலகிருஷ்ணண்,மாணிக்கம், ராமதாஸ், பூங்கொடி மணி, பரகத்நிஷா, செல்வராணி, தேவிகாஅருண்,திமுக கிளைசெயலாளர்கள் பாலகிருஷ்ணண், கருப்பையா, அசோக், பாலு, மொய்தின்ஷா, கபில், அமிர்தி, செல்வக்குமார், திமுக இணையதள பிரிவு ங்காதரன், பூபதி, ஒன்றிய பிரதிநிதி ஜெயராமன்,மற்றும் திமுக தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.