karghum bharatham Scheme : 120 centers and over 286 basic literacy exams
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்கும் பாரதம் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் 15 வயதிற்கு மேல் 80 வயதிற்குள் எழுத படிக்க தெரியாதவர்கள் அனைவருக்கும் இன்று (19-03-2017) அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 120 மையங்களில் 286 பயனாளிகள் தேர்வு எழுதினர். இத்தேர்வு நான்கு ஒன்றியங்களில் உள்ள அந்தந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.
இத்தேர்வினை பார்வையிடுவதற்கு பள்ளிச் சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உதவித் திட்ட அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், கற்கும் பாரதம் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தேர்வு நடைபெற்ற மையங்களைப் பார்வையிட்டனர்.