Karthikai Mahadeepam on Mount Brahmarshi Mount, Thousands of devotees Jyoti Darshan

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தா;கள் சாரல் மழையிலும் மலைஏறி ஜோதி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரம்மரிஷிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 36-வது ஆண்டு கார்த்திகை தீபதிருவிழா இன்று நடந்தது.

அன்னை சித்தர் ராஜ்குமார் குருஜி தலைமையில் மலைஉச்சியில் கொங்கணர் தூணில் 300 மீ. திரி மற்றும் ஆயிரம் கிலோ நெய் மற்றும் 50 கிலோ கற்பூரம் கொண்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.

இதனை முன்னிட்டு 3 நாட்கள் தொடா;ந்து டிச.1-ந்தேதி வரை மாவட்ட சன்மார்க்க சங்கம் சார்பில் திருவருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை பெரம்பலூர் பிரம்மபுரிஸ்வரர் கோவிலில் காலை 6மணிக்கு கோபூஜை, அஸ்வபூஜையும், 210 சித்தர் யாகமும், 10 மணிக்கு தீப கொப்பரை, திரி,நெய் ஆகியவை வைத்து சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்பு, அங்கிருந்து யானை மீதுவைத்து திரி மற்றும் கொப்பரையை வைத்து ஊர்வலமாக எளம்பலூர் மலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஞான.சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

இதில் பேரூர் மடத்து 63 நாயன்மார்கள் பஞ்சலோக சிலை, திருவாரூர் சிவனடியார்களுடன், ஸ்ரீசிவராமலிங்க சுவாமி சிவ பூதகன வாத்தியங்கள் மற்றும் மேள தாள இசை முழங்க எளம்பலூர் பிரம்மரிஷி மலைக்கு ஊர்வலமாக தீப பொருள்கள் கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்திற்கு சதுரகிரி சித்தர் காளிமுத்து சுவாமி தலைமை வகித்தார். எளம்பலூர் பிரம்மரிஷிமலை இளம் சித்தர்கள் மகாலிங்கம், தவசிநாதன் மற்றும் காகபுஜண்டர் சித்தரின் பக்தர்கள் மற்றும் திரளான சாதுக்கள் கலந்து கொண்டனர்.

மாலை 6மணிக்கு வானவேடிக்கைகளுடன் அருட்பெருஞ்சோதி மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். மேலும், சாரல் மழையிலும் மலைஉச்சிக்கு சென்று கொங்கணர் தூணில் தேங்காய் உடைத்து சிறப்புவழிபாடு செய்து கார்த்திகை மகாதீபத்தை வழிபட்டனர்.

மலைஅடிவாரத்தில் சாதுக்களுக்கு வஸ்திரதானமும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!