Karunanithi Centenary Celebration: Minister Sivashankar provided government welfare assistance worth Rs.16.7 crore.

பெரம்பலூரில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா, பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் விழா நடந்தது. அதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் 2,297 பயனாளிகளுக்கு ரூ.16.70 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கற்பகம் தலைமையில்
வழங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 1,587 பயனாளிகளுக்கு ரூ.8.26 கோடி மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் 43 பயனாளிகளுக்கு ரூ.3,82,000 மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 95 பயனாளிகளுக்கு ரூ.18,45,000 மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகையும், விபத்து நிவாரண உதவித் தொகையாக 4 பயனாளிகளுக்கு ரூ.4,07,500 மதிப்பீட்டிலும், வேளாண்மைத் துறையின் சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் (சுழல் கலப்பை) மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.1,52,000 மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.33,450 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.54,790 மதிப்பீட்டில் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரமும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண உதவி திட்டத்தின் கீழ் 227 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பீட்டிலும், முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 149 மாணவ, மாணவிகளுக்கு 6.52 கோடி மதிப்பீட்டிலும் என பல்வேறு துறைகளின் சார்பில் 2,297 பயனாளிகளுக்கு ரூ.16,69,98,950 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் மீனா அண்ணாத்துரை (பெரம்பலூர்), ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை(வேப்பூர்), பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ்(குரும்பலூர்), ரா.வள்ளியம்மை (அரும்பாவூர்) ஜாகீர்உசேன் (லப்பைக்குடிக்காடு), பாக்கியலட்சுமி (பூலாம்பாடி), நகராட்சித் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!