Keeping the goods produced fine of Rs 10 lakh Mosquito Larva : perambalur municipal

பெரம்பலூர் நகராட்சியில் இருந்து வெளியிட்டுள்ள அறிவிப்பு :

mosquitoபெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் தடுப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வீடுகள் மற்றும் கட்டிட வளாகத்தில் மழைநீர் மற்றும் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய டயர்கள், டப்பாக்கள், தேங்காய் சிரட்டை, இளநீர் குடுவைகள், உபயோகப்படுத்தப்பட்ட பாட்டில்கள் மற்றும் உபயோகமில்லாத மீன் தொட்டிகள், ஆட்டுக்கல் உரல்கள், சிமெண்ட் தொட்டிகள் உபயோகம் இல்லாத பாத்திரங்கள் இவற்றில் கொசுப்புழு உற்பத்தி ஆகின்றது. மேலும், மழைக்காலம் என்பதால் கட்டுமானம் நடைபெறும் கட்டடங்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தி ஆகின்றது. இவற்றை பொதுமக்கள் அப்புறப்படுத்த நகராட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர்.

நகராட்சிப்பகுதியில் 42 களப்பணியாளர்கள் கொசுப்புழு ஒழிப்பு பணியில் வீடுதோறும் சென்று கொசுப்புழு உற்பத்தி தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் நகராட்சிப்பகுதியில் காலை, மாலை இருவேளைகளில் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டுவருகிறது. முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளிகளில் மாணவ,மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி ஊழியர்கள் பார்வையிட்டு கொசுப்புழு உற்பத்தியை தடுக்காத வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுவருகிறது.

இந்த அறிவுறுத்தலை பின்பற்றமால் அலட்சியத்துடன் செயல்பட்டு கொசுப்புழு உற்பத்திக்கு ஏதுவாக தமது குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனம் அதன் சுற்றுப்புற பகுதிகளை வைத்திருக்கும் நபர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரசட்டம் 1939 பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய அபராதம் விதிக்கப்படுவதுடன் நீதிமன்ற வழக்கும் தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நகராட்சி மன்ற தீர்மானம் எண்.407, நாள்.16.10.2015 ன்படி அபாரதம் விதிக்க வழிவகை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியாகும் பொருட்கள் வைத்திருப்பதை கண்டறிந்தால் முதல் முறை ரூ.500ஃ- இரண்டாம் முறை ரூ.1000- மூன்றாம் முறையும் தொடர்ந்தால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும். வணிக நிறுவனங்களில் கொசுப்புழு உற்பத்தி பொருட்கள் வைத்திருப்பதை கண்டறிந்தால் முதல் முறை ரூ.5000- இரண்டாம் முறை ரூ.10000- மூன்றாம் முறை நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் கொசுப்புழு உற்பத்தி ஆகாமல் தடுத்திடவும், நகராட்சிக்கு நல்லமுறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!