kendira-vidhyalaya-Students rally in perambalur
பெரம்பலூர் : மத்தியஅரசு 70-வது சுதந்திர தினத்தை ஒட்டி அதற்கான வாரவிழாவை இம்மாதம் 23-ந்தேதி வரை கொண்டாட உத்திரவிட்டுள்ளது.
அதன்பேரில் பெரம்பலூரில் மத்திய அரசு மனித வள மேம்பாடடு துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சுதந்திர தின வாரவிழா நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதனை முன்னிட்டு வாரவிழா நிறைவு ஊர்வலத்தை பள்ளி முதல்வா; கல்யாணராமன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலம் மதனகோபாலபுரம், ரோவர் சாலை உள்ளிட்ட பிரதான தெருக்களின் வழியே சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரைபயிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.