killed two children who went to bathe in the lake near In Perambalur
dip-in-lake-andur பெரம்பலூர் அருகே ஏரியில் தவறி விழுந்த இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரபோஜி (வயது 37) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு சங்கவி (வயது 8 ) சஞ்சை (வயது 6) ராதா (வயது 1 ) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

சங்கவி 3 ம் வகுப்பும் , சஞ்சை 1 ம் வகுப்பும் அந்தூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறனர். இன்று சரபோஜி கொத்தனார் வேலைக்கும், அவரது மனைவி முத்துலட்சுமி வயல் வேலைக்கும் சென்று விட்டனர்.

இந்நிலையில் இன்று மாலை சங்கவியும், சஞ்சையும் அந்தூரில் இருந்து அசூர் செல்லும் பாதையில் உள்ள புது ஏரியில் குளிக்க சென்றனர் .

இந்நிலையில் குளிக்க சென்ற இரு குழந்தைகளும் வீடு திரும்பதாததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏரியில் தேடினார். அங்கு இரு குழந்தைகளும் நீரில் முழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து உறவினர்கள் குன்னம் போலீசுக்கு கொடுத்த தகவலின் பேரில், மங்களமேடு டி.எஸ்.பி ஜவகர்லால், குன்னம் இன்ஸ்பெக்டர் அன்பு செல்வன் ஆகியோர் விரைந்து சென்று இறந்த குழந்தைகளை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இரு குழந்தைகள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!