Krishna Jayanthi is celebrated as a festival in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், எசனை, குரும்பலூர், அம்மாபாளையம், மேலப்புலியூர், கீழப்புலியூர், அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம் தொண்டைமாந்துறை, கடம்பூர், கள்ளப்பட்டி, வெங்கனூர், வெண்பாவூர், கை.களத்தூர், வ.களத்தூர், வேப்பந்தட்டை, அன்னமங்கலம், அனுக்கூர், வாலிகண்டபுரம், சிறுவாச்சூர், விஜயகேபாலபுரம், நாரணமங்கலம், பாடாலூர், செட்டிக்குளம், கொளக்காநத்தம், குன்னம், வேப்பூர், திருமாந்துறை, திருவாலந்துறை, எறையூர், கல்பாடி, உள்ளிட்ட பல்லேறு ஊர்களில் வெகுவிமரிசையாக கிருஷ்ணர் ஜெயந்தி இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் இன்று 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், குழந்தைகள் பெரியவர்கள் என கொண்டாடி மகிழ்கின்றனர்.

வட இந்தியாவில் அஷ்டமியை கணக்கிட்டு கிருஷ்ண ஜெயந்தி, கோகுலஷ்டமி என்றும், தென்இந்தியாவில் பிறப்பு நட்சத்திரத்தை கணக்கிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி, கிருஷ்ணர் பிறப்பு என்றும் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இது , ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்துக்கள் விழாவாகும்.

அஷ்டமி என்றால் எட்டாவது திதி நாளைக் குறிக்கிறது. தேய்ப்பிறையில் வரும் அஷ்டமி திதியை மிகவும் விசேஷமானது என கூறப்படுகிறது. அஷ்டமி விரத்தைத் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும். மாதங்களில் வரும் ஒவ்வொரு அஷ்டமிக்கும் விஷேச பெயர்கள் உண்டு. ஆவணி தேய்பிறையை அஷ்டமி ஸ்தானுஷ்டமி என கூறவர்.

இந்நாளில்தான் மதுரா சிறைச்சாலையில் வசுதேவர் – தேவகி தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக கிருஷ்ண பெருமான் பூமியில் பிறந்தார்.

இந்நாளை கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் வடமாநில பகுதிகளில் இத்திருநாளை ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்ற பெயரில் விரதம் எடுத்து சிறப்பாக கொண்டாடுவார்கள்.

மக்கள் வீடுகளில் இந்நாளை பகவான் கிருஷ்ணுடைய பிறந்த நாளாக கொண்டாடி வருகிறார்கள். கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள்

இந்துக்களின் முக்கிய கடவுளும், இதிகாசங்களின் நாயகனுமான கிருஷ்ணளை பற்றி சிறப்பாக மகாபாரதம் போனற் கதைகளால் விவரிக்கப்படுகிறது.

இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே அதிகம், இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.

கிருஷ்ணரின் கதைகள் கல்வி, வீரம், விவேகம், நீதி, தர்மம் நிறைந்ததாக காணப்படுவதால் இந்து மத குழந்தைகளுக்கு போதிக்கப்படுகிறது.. அவை அவரை பல்வேறு கோணங்களில் சித்தரிக்கிறது.

ஒரு கடவுள் குழந்தையாக, குறும்புக்காரனாக, முன் மாதிரி காதலனாக, ஆசானாக, வழிகாட்டியாக என பல வகைகளில் குறிப்பிடப்படுகின்றது.

தமிழில் குழந்தையின் பருவமாக கூறப்படும் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய ஒவ்வொரு பருவத்திற்கும் கிருஷ்ணனுக்கு பாடல்கள் இயற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழில் பாரதியின் பாடல்களை குறிப்பிடலாம்.

அவரை பற்றிய குறிப்புகள் மகாபாரதம், ஹரிவம்சம், பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் உள்ளன.

கிருஷ்ண வழிபாடு, பால கிருஷ்ணர் அல்லது கோபாலன் என்ற பெயரில் 4 வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்ததை அறிய முடிகிறது. எனினும் 10 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பக்தி இயக்கத்தின் மூலம் கிருஷ்ணர் வழிபாடு உச்சத்தை அடைந்தது.

ஒரிசாவில் ஜெகன்னாதர், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவில் உள்ள விட்டலர், கேரளாவில் குருவாயூரப்பன், துவாரகையில், துவாரகாதீசர், இமயத்தில் பத்ரிநாதர் என கிருஷ்ணனை பல பெயர்களில், வடிவங்களில் வழிபடுகின்றனர். 1960 களில் உருவாக்கப்பட்ட இஸ்கான் அமைப்பு கிருஷ்ண வழிபாட்டை மேற்கத்திய நாடுகளுக்கும் கொண்டு சென்றது.

ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும்.

மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும்.

இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுக்கள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக இருக்கும்.

தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகளும் கிருஷ்ணரின் கோவிலில்களில் நடைபெறுகின்றன.

கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தியான இன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூஜைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன.

கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.

நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார்.

இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள்.

ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா!! ஒலி கோவில்களில் தோறும் முழங்குகிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!