Kumbabhishekam Temple, Kelapuliyur Arulmigu Karpaga Vinayakar temple near Perambalur.
பெரம்பலூர்ர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயில் ஊர்பொதுமக்கள் நன்கொடையால் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டன.
திருப்பணி வேலைகள் முடிந்ததை அடுத்து இந்தகோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோயில் முன்பு யாகசாலை கட்டப்பட்டு கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
முதல் கால யாக பூஜை மங்கள இசையுடன் நேற்று மாலை புதன்கிழமை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, அங்குரார்பணம், ரக்ஞாபந்தனம், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், பூர்ணாகதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை நாடி சந்தனம், யாத்ரா தானம், யாக பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் சுமார் 10.30 மணியளவில் யாகசாலையில் இருந்து வேத விற்பன்னர்கள் கலசங்களை சுமந்து, வெடி மேளதாளங்களுடன் கோயிலை வலமாக வந்தனர். தொடர்ந்து வேதவிற்பன்னர் குழுவினரால் அருள்மிகு கற்பக விநாயகர் கோயில் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டடு கும்பாபிஷேகம் நடைபெற்றது. குழுமியிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது மஞ்சள் கலந்து புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் அனைவருக்கும் விபூதி, குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். கீழப்புலியூர், சிறுமத்தூர், முருக்கன்குடி, காருகுடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டனர்.