குன்னம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி. இராமச்சந்திரன் இன்று குன்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையொட்டி அதிமுக தொண்டர்களுடன் சென்ற குன்னம் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குன்னம் வட்டாசியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கள்ளபிரானிடம் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
சிதம்பரம் தொகுதி எம்.பி. சந்திரகாசி, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, ஆகியோர் உடனிருந்தனர்.
அதிமுக தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.