பெரம்பலூர் : குன்னம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வேட்பாளர் வழக்றிஞர் த.துரைராஜ் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் துரைராஜ் கட்சி தொண்டர்களுடன் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் வக்கீல் த.துரைராஜ் பேசியதாவது,
குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து பொது மக்களின் அடிப்படை தேவைகளையும் எவ்வித பாகுபாடு இன்றியம் நிறைவேற்றுவேன்.
திமுக ஆட்சியில் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு கொண்டுவரப்பட்டு ஆட்சி மாற்றத்தின் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் உட்பட அனைத்து திட்ங்களையும்,
குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், அனைத்து தெருக்களிலும் சாக்கடை வசதி, மின் விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படைவசதி செய்து தருவேன் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைஎடுத்து கூறினார்.
கீழப்புலியூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் வக்கீல்.தங்க.துரைராஜ் கே.புதூர், நமையூர், முருக்கன்குடி, பெருமத்தூர், மிளகாய்நத்தம், பெண்ணக்கோணம் உட்பட பல்வேறு கிராமங்களில் வீதி,வீதியாக வீடு, வீடாக சென்று பொது மக்களை சந்தித்து வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார்.
வேட்பாளர் பிரச்சாரத்திற்கு சென்ற அனைத்து ஊர்களிலும், பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
இதில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வேப்பூர் ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், கிருஷ்ணமூர்த்தி,பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாஜலம், மாநில நிர்வாகிகள் துரைசாமி, பெரியசாமி, இளைஞரணி நிர்வாகி கரிகாலன், கருமலர்மன்னன்,வழக்கறிஞர் சுந்தர்ராஜன் உட்பட பலர் உடன் சென்றிருந்தனர்.