Kunnam constituency DMK candidate Sivasankar village collected votes!

குன்னம் தொகுதிக்கு திமுக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் எஸ்.எஸ். சிவசங்கர் தனது கூட்டணி கட்சியினருடன் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள சிறுகுடல், சிலோன்காலனி, கே.புதூர், சிறுமத்தூர் குடிக்காடு, முருக்கன்னுடி, நமையூர், பொன்னகரம், நல்லூர், பெருமத்தூர், மிளாகநத்தம், பெ.குடிக்காடு, கிளியூர், நன்னை, சாத்தநத்தம், கிழுமத்தூர், கி.குடிக்காடு, கைப்பெரம்பலூர், கோவிந்தராசாப்பபட்டினம், பூங்காநகர் ஆகிய ஊர்களில் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலமிட்டு வாழ்த்தி அனுப்பினர். பொதுமக்களிடம், உதயசூரியன் சின்னத்திற்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி செய்ய வேண்டும் கேட்டுக் கொண்டார். முன்னதாக அவர் பேசியதாவது;

பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விடவேண்டாம். மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம், நகர பேருந்தில் இலவச பயணம், நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை உயர்த்தி தரப்படும், கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், வழங்கப்படும், கல்விக்கடன், பயிர்க்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும். திமுக ஆட்சிக்கு வந்த உடன், கொரோனோ தொகையாக திமுக அறிவித்ததில் மீதமுள்ள 4 ஆயிரம் வழங்கப்படும், நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாட்கள் வழங்கபடுவதோடு, ஊதியம் உயர்த்தி தரப்படும், எண்ணற்ற பலன் தரும் திமுக தேர்தல் அறிக்கை படித்து பாருங்கள், உன திமுகவின் சாதனை எடுத்துரைத்து வாக்குகள் சேகரித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!