பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.டி.இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்புலியூர், கே.புதூர், நன்னை குடிக்காடு, பொன்னகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதிவிதீயாக சென்று தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சென்ற அனைத்து ஊர்களிலும், பட்டாசு வெடித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
நன்னை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏரியில் வேலை செய்து ஏராளமான பெண்கள் உட்பட ஏராளமானோரிடம் குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் நன்றி தெரிவித்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் அவரிடம், குழந்தைகள் உரிய நேரத்திற்கு பள்ளி செல்ல பேருந்துகள் இயக்க வேண்டும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைத்து கொடுக்கவும், கிராமத்தில் கூடுதலாக பால் கொள்முதல் செய்யும் இடத்தை அமைத்து கொடுக்க வேண்டும், குடிநீர், உள்ளிட்ட அடிபபடை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், என கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அப்போது எம்.எல்.ஏ ராமச்சந்திரன் பொதுமக்களின் கோரிக்கைகளை நிதானமாக கேட்டறிந்த அவர் அரசு அதிகாரிகளுடன் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அப்போது அதிமுக நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.