குன்னம் சட்டமன்ற தொகுதி மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் முகமது ஷானவாஸ்கான் இன்று குன்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையொட்டி அதிமுக தொண்டர்களுடன் சென்ற குன்னம் சட்ட மன்ற தொகுதி மக்கள் கூட்டணியின் விசிக வேட்பாளர் முகமது ஷானவாஸ்கான் கூட்டணி கட்சியினருடன் குன்னம் வட்டாசியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கள்ளபிரானிடம் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
தேமுதிக அவைத் தலைவர் கணபதி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் துரைசாமி மற்றும் விசிக மாவட்ட துணைச் செயலாளர் ந.கிருஷ்ணகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.