Kuruvai paddy cultivation sugarcane material as needed: Sugarcane Research and Development at the prospect of meeting
கரும்பு ஆராய்ச்சி மற்றும் கரும்பு அபிவிருத்தியாளர்களின் மாநில அளவிலான கூட்டம் பெரம்பலூரில் 2 நாட்கள் நடந்தது
பெரம்பலூர் : ஆண்டுதோறும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 45 சர்க்கரை ஆலைகளின் கரும்புத்துறை அலுவலர்கள், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் கரும்பு விஞ்ஞானிகள், கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க கழக கரும்பு விஞ்ஞானிகள், தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகளின், வேளாண்மைத்துறை மற்றும் சர்க்கரை துறை அலுவலர்கள் அனைவரும் ஒன்று கூடி கரும்பு சாகுபடி விஞ்ஞானத்தில் உள்ள முன்னேற்றங்களையும், சவால்களையும் இரண்டு நாட்கள் விவாதித்து முன்னேற்றப் பாதைகளை வகுப்பது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான இந்த கூட்டம் உடும்பியம் தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலை மற்றும் கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க கழகம் சார்பில் பெரம்பலூரில் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது.
இக்கூட்டத்தை கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க கழக இயக்குநர் டாக்டர் பக்ஷிராம் தொடங்கி வைத்தார்.
விழாவில், தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் ஜெ. செந்தில்ராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:
நெல் சாகுபடியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4 முறை சாகுபடி என்ற அளவில் தற்போது நெற்பயிர் சாகுபடி வளர்ந்துள்ளது. இதே போன்று கரும்பிலும், குறைந்த வயதுடைய இரகங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், கரும்பு சாகுபடியில் சிறு,சிறு இயந்திரங்களை அறிமுகப்படுத்தி, கூலி ஆட்கள் பற்றாக்குறையை நீக்கவும், சாகுபடி செலவை குறைப்பதற்கும் விஞ்ஞானிகள் வழிவகை செய்ய வலியுறுத்தி பேசினாh;.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி மாநில வேளாண்மை இயக்குநர் டாக்டர் ராமமூர்த்தி பேசியதாவது:
பல்வேறு காரணங்களால், கரும்பு சாகுபடியை கைவிட்டு வரும் விவசாயிகளின் மனப்பாங்கை மாற்றும் வண்ணம், கரும்பு ஆராய்ச்சியாளர்களும், அபிவிருத்தியாளர்களும் கவனம் செலுத்தி முன்னேற்றம் காண வேண்டும் என குறிப்பிட்டார். கூட்டத்தில் நவீன முறையில் கரும்பு சாகுபடி செய்வது குறித்த கையேடு வெளியிடப்பட்டது.
மேலும், இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையின் செயல் இயக்குநர் சின்னப்பன்; மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் சுமார் 400 கரும்பு விஞ்ஞானிகள் மற்றும் கரும்பு அபிவிருத்தி பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.