பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவரின் செயலற்ற நிர்வாகத்தை கண்டித்து லப்பைக்குடிகாடு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு லப்பைக்குடிக்காடு பேரூராட்சி தி மு க செயலாளர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். அனைவரையும் சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளர் சம்சுதீன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன், ஆகியோர் கண்டித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பார் துரைசாமி, மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பெரியசாமி, பொதுகுழு உறுப்பினர் பட்டுசெல்வி ராஜேந்திரன் ஆடுதுறை கிளை செயலாளர் மலர்வண்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரசூல் அகமது நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ராணி பால்ராஜ், ஷேக் தாவூத், சுதாதேவி ஆகிய மூன்று பேரூராட்சி உறுப்பினர்கள் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை செயல்அலுவலர் சின்னசாமியிடம் கொடுத்தனர். அவர் ராஜினாமா கடிதத்தை, தான் பெறுவதற்கு சட்டத்திலே இடம் இல்லை எனவே பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அவர்களிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.