Lack of drinking water! Tell a toll free telephone call: Perambalur Collector’s notice
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியைவிட குறைவாக பெய்த காரணத்தினால் குடிநீர் ஆதாரங்களின் நீர்மட்டம் குறைந்தும் சில இடங்களில் நீர் இருப்பு வறண்டும் காணப்படுகிறது. இதனால் ஊரகம் மற்றும் நகர் பகுதிகளில் வறட்சிக்கு முன்பிருந்த வழக்கமான அளவுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.
எனவே, தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்பும் நபர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் (பொது) பிரிவிலுள்ள அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையினை 1800-425-4556 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
குடிநீர் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கின்ற புகார்களின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்துத்துறை அலுலவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலரை (கி.ஊ) 9842090551,7402607794 என்ற எண்களிலும், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை(கி.ஊ) 9843548970, 7402607801 என்ற எண்களிலும்,
வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலரை (கி.ஊ) 9843548970, 7339320023 என்ற எண்களிலும், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரை 9677615099, 7402906640 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
பெரம்பலூர் நகராட்சி ஆணையரை 9488471321 என்ற எண்ணிலும், குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலரை 7824058306 என்ற எண்ணிலும், பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலரை 7824058308 என்ற எண்ணிலும், அரும்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலரை 7824058305 என்ற எண்ணிலும், லப்பைகுடிகாடு பேரூராட்சி செயல் அலுவலரை 7824058307 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டோ அல்லது எழுத்து மூலமாக நேரிலோ தகவல்களை தெரிவிக்கலாம், என ஆட்சியர் அறிவித்துள்ளார்.