Launches Facebook Page on behalf of Tamil Nadu
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் காலதாமதமான தகவல் :
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுப்புகள் மற்றும் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை மக்களிடையே எடுத்துச்செல்லும் பணியினைச் செய்தி மக்கள் தொடர்புத் துறை செய்து வருகிறது.
இத்துறையின் மூலம் அரசின் செய்தி வெளியீடுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோப் பதிவுகள் ஆகியன மின்னஞ்சல் மூலமாக நாளிதழ்கள், தெலைகாட்சிகள், செய்திமுகமைகள், காலமுறை இதழ்கள் மற்றும் இணையதள செய்தி நிறுவனங்கள் போன்ற அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டு, அவற்றை செய்திதாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் அவற்றைத்தெரிந்துகொள்வதற்கு இத்துறை உறுதுணையாக இருந்து வருகின்றது.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இணையதளமான www.tndipr.gov.in, மற்றும் அரசு இணையதளமான www.tn.gov.in, ஆகிய இணையதளங்கள் வாயிலாகவும் அரசின் செய்திகள் மக்களைச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்சியாக, சமூக வலைதளங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் காரணமாக, அரசின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை நொடிப்பொழுதில் பொதுமக்களை சென்றடையும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பயன்படுத்திவரும் முகநூல் ( FACE BOOK ) வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புகள் மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் பதிவிட்டு வெளியிட இத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முகநூலில் இத்துறையின் சார்பாக ““TN DIPR” என்ற முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் மற்றும் அரசின் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சாதனைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் ஆகியவற்றை மக்களிடையே எடுத்துச்செல்லும் பணியினை செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்து வருகின்றது.
எனவே பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் இச்சேவையை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு அறிவிக்கும் திட்ங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொண்டு, அத்திட்டஙகள் மூலமாக தங்கள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.