Leave with pay on election day: Perambalur Collector Information

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வெங்கிடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021, வரும் 06.04.2021 அன்று நடைபெறுவதைத் தொடர்ந்து, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்தல் தினத்தன்று அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். இதனை மீறும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க, பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மு.பாஸ்கரன் 9788482591 என்ற கைபேசி எண்ணிலும், பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் எஸ்.சாந்தி 7871148291 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். பெறப்படும் புகார்களின் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே 100 சதவீத வாக்குப்பதிவினை ஏற்படுத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!