Legal Awareness Camp Judge Information In All Villages Of Perambalur District!

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பவள விழா கொண்டாட்டமாகவும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25 ஆம் ஆண்டுகள் நிறைவடைதையொட்டி வெள்ளி விழா கொண்டாட்டமாகவும் நடத்திடும் வகையில் 2021 அக்டோபர் 2 முதல் 2021 நவம்பர் 14வரை சட்ட விழிப்புணர்வு முகாம் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் தொடக்க விழா கடந்த அக்.2 அன்று நடைபெற்றது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம பஞ்சாயத்துக்களிலும் பொதுமக்களின் வீடு தேடி சென்று பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலுருந்து பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, திருநங்கைகளுக்கான சட்ட பாதுகாப்பு மற்றும் உரிமைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்தான சட்ட பாதுகாப்பு, கொத்தடிமை ஒழிப்பு சட்ட விழிப்புணர்வு, வறுமை ஒழிப்பு சட்ட விழிப்புணர்வு, மனித கடத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு மக்கள் நீதிமன்றம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் 2021 அக்டோபர் 2 முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், வழக்கறிஞர்கள், மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, சட்ட தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கான சட்ட உதவிகள் பெறுவதற்கு பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி சட்ட உதவியை பெற்றுக் கொள்ளவும், தங்கள் இருப்பிடத்திலிருந்தே கைப்பேசி மூலம் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு NALSA Legal Services செயலி மூலம் தங்களது கோரிக்கையினை பதிவிட்டு பயன்பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஹ. பல்கீஸ்தெரிவித்தார். மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி எஸ்.கிரி, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் ஏ.டி.எஸ்.பி பாண்டியன் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சு. லதா ஆகியேர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!