Life sentence for those who tried to rape a girl: Namakkal court verdict
நாமக்கல் : 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த 50 வயது நபருக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து உத்திரவிட்டது.
நாமக்கல் அருகே எருமப்பட்டி ஜீவானந்தம் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராஜா (வயது 50). அவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி அதேபகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி ராஜாவை எருமப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், அதன் மீது நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி ராஜாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்திரவிட்டார். அபராத தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.