Like other districts to provide Rs 18 to 20 liters of purified drinking water when! The collector of the public question?

பெரம்பலூர். மார்ச்.3 –

தமிழகத்தில் போதுமான மழையின்மை காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யும் பொருட்டு பேருந்துநிலையம், “பண்ணைபசுமை காய்கறி கடை” மற்றும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளில் 20லிட்டர் கேன் ஒன்று ரூ.18-க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் நகரம் முதல் கிராமங்கள் வரை தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணமாக குடிநீரை அதிக விலை அதாவது 20 லிட்டர் கேன் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை (மினரல் வாட்டர்) ரூ. 30 முதல் 35 வரை வாங்கி உபயோகித்து வருகின்றனர்.

மக்கள் பயனடைய அரசு நடைமுறையில் கொண்டு வந்துள்ள திட்டம் பயனளிக்க விடாமல் மாவட்ட நிர்வாகம் முடக்கி வைத்துள்ளதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து வறட்சியின் காரணமாக வருமானம் குறைந்துள்ள மக்களை காக்க , பிற மாவட்டங்களில் வழங்குவதை போன்று 20 லிட்டர் தண்ணீரை ரூ.18 வழங்குவது எப்போது என ஆட்சியருக்கு பொது கேள்வி எழுப்பி உள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!