Livestock Integrated Research Center & Medical College Foundation in Salem District, Thalaivasal

வரும் பிப்.9 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச தரத்தில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாய பெருவிழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் சர்வதேச தரத்தில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி, விவசாய பெருவிழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை துவக்கி, விழா பேருரையாற்றுகிறார். முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை ஏற்க, காலந்டை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை.கே. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். மேலும், அமைச்சர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இவ்விவசாய பெருவிழா தொடர்ச்சியாக பிப.10. மற்றும் பிப்.11 அன்றும் கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்துறை, பால்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகிய துறைகளின் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளுடன் மிக சிறப்பாக நடைபெற இருப்பதால் இம்மாவட்ட விவசாய பெருமக்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!