Local elections: the public to report complaints of violations of toll-free telephone
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 17.10.2016, 19.10.2016 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 17.10.2016 அன்று முதல் கட்டமாக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர் – அரும்பாவூர் – பூலாம்பாடி பேரூராட்சிகளுக்கான தேர்தல்களும், 19.10.2016 அன்று இரண்டாம் கட்டமாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் லப்பைகுடிகாடு பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கான தேர்தல்களும் நடைபெறவுள்ளது.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறை மீறல்கள் தீவரமாக தொடர்ந்து கண்கானிக்கப்பட்டு வருகின்றன.
தேர்தலை சுகந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 1800-425-4556 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விபரங்களையும், தங்களது புகார்களையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது.