பெரம்பலூர் அருகே லாரியும் காரும் மோதிக் கொண்டதில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கே. கார்த்திகேயன். இவரது மனைவி காயத்திரி (வயது 34).
கே. கார்த்திகேயனின் நண்பரான விடுதலை சிறுத்கைள் கட்சியை சேர்ந்த ஒருவரின் காரில் வசந்தம் கார்த்திகேயன் மனைவி காயத்திரி திருச்சியில் உள்ள ஒரு கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியை கடந்து சென்ற போது தனியார் பெட்ரோல் பங்கில் இருந்து லாரி சாலையில் குறுக்கிட்டது. அதிவேகமாக வந்த கார் ஓட்டுனர் சமர்த்தியமாக காரை லாரியின் மீது லோசாக மோதி சாலையில் நிறுத்தினர்.
இதில் காருக்குள் வந்தவர்கள் அதிர்ஷ்ட்டவசமாக உயிர் தப்பினர். இதில் எம்.எல்.ஏவின் மனைவி காயத்திரிக்கு மட்டும் கையில் காயம் ஏற்பட்டது.
உடன் வந்த குழந்தைகளுக்கும் சிறு சிறு காயம் ஏற்பட்டது. மற்றொரு காரில் வந்த உறவினர்கள் அவர்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.