Maha Shivaratri: the sacrificial ritual at the temple of Brahma risimalai Kagan Eswarar temple near in perambalur

பெரம்பலூர் அருகே பிரம்ம ரிஷிமலை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா: 4 கால ருத்ரவேள்விகளுடன் விடியவிடிய நடந்தது.

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்ம ரிஷிமலைஅடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா: 4 கால ருத்ரவேள்விகளுடன் விடியவிடிய நடந்தது. இதில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனா;.

பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரம்மரிஷிமலை அடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை உடனுறை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நேற்றிரவு 7 மணிக்கு மணிக்கு கோபூஜை, கஜபூஜை, அஸ்வ வழிபாடு மற்றும் ருத்ர பூஜைகளுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு அன்னை சித்தா; ராஜ்குமாh; சுவாமி, ரோகிணி தலைமை வகித்தனர்.

அதே நேரத்தில் மலைஉச்சியில் அதிர்வேட்டுக்கள், வானவேடிக்கைகள் முழங்க 2 மகாதீபங்கள் ஏற்றப்பட்டு 210 சித்தர்கள் வேள்வி நடந்தது.

இதனைத் தொடர்ந்து காகன்னை ஈஸ்வரர் கோவிலில் ருத்ரஜெபம், ருத்ரவேள்விகள், பன்னிரு திருமுறைகள், சிவபுராண பாராயணத்துடன் நடந்தது. பூரண கும்பம் வைக்கப்பட்டு கலசவழிபாடும், 108 சங்காபிசேகமும், ஒவ்வொரு கால யாகசாலைபூஜை முடிவடைந்துடன் மூலவருக்கு அபிசேகங்களும், மகாதீபஆராதனையும் நடந்தது.

இதில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், சென்னை தொழில்அதிபர் சென்னை ராம்ஜி, டாக்டர் கோவிந்தராஜ், திட்டக்குடி பி.டி.ராஜன், சன்மார்க்க சங்க மாவட்ட செயலாளர் சுந்தரராஜன், சிவத்தொண்டர் நடராஜன், இலங்கை ராதா மாதாஜி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இளம் தவயோகிகள் சுந்தர மகாலிங்கசுவாமி, தவசிநாதன் மற்றும் குருகடாட்சம் மெய்யன்பர்கள் செய்திருந்தனர்.

மேலும், சிவராத்திரியின் மகிமையையும், சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் புராண சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடந்தது. இதேபோல வடக்குமாதவி சாலையில் சமத்துவபுரம் அருகே உள்ள மகாலிங்க சித்தர் சுவாமிகள் அதிஷ்டானத்திலும், பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் சுவாமிகளின் மடத்திலும் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு ருத்ரவேள்விகள், ருத்ரஜெபவழிபாடு நடந்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!