Maintaining hygiene in schools: teachers training classes
பெரம்பலூர் : அரசுப் பள்ளிகளில் பயிலும்; வளரிளம் பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கினை முறையாக எரியூட்டி அப்புறப்படுத்தும் முறை குறித்தும், கழிவறைகளை தூய்மையாக பயன்படுத்தும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான “சுகாதாரம் பேணுதல்” என்ற விழிப்புணர்வு முகாம் இன்று எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
புதுவாழ்வுத் திட்டம் மற்றும் மகளிர்திட்ம் மூலமாக பள்ளிகளில் பணியாற்றவுள்ள 31 சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பேரூராட்சிப்பகுதிகள் நீங்களாக பெண்கள் மற்றும் இருபாலர் பயிலும் 33 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
மாணவிகளிடம் தன்சுகாதாரம் பேணுதல், நீர்மேலாண்மை, கழிவறைகளை தூய்மையாக பராமரித்தலின் முக்கியத்துவம் குறித்தும், மாணவிகள் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் மன அழுத்தங்கள், மாணவிகள் அடையும் அச்சம், கூச்சம் உள்ளிட்ட பிரச்சனைகளை கையாளும் முறைகள் குறித்தும், கழிவறைகளை சுகாதாரத்துடன் பயன்படுத்தல் குறித்தும், நாப்கின்களை பயன்படுத்தும் முறை, அகற்றும் விதம் ஆகியவை குறித்தும் மாவட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர், மருத்துவர் அனுசுயா விரிவாக எடுத்துரைத்தார். மேலும், நாப்கின் எரியூட்டியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும்; ஆசிரியைகள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு செயல்விளக்கம அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி முகாமில் பள்ளி தலைமையாசிரியர் (பொ) க.கமலாம்பாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.