Mango, Guava, Pomegranate Normal and Dry Planting Techniques Free Training

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள அறிவிப்பு :

நாமக்கல்லில் மா,கொய்யா மற்றும் மாதுளையில் சாதாரண மற்றும் அடர் நடவு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 5ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 9 மணிக்கு மா, கொய்யா மற்றும் மாதுளையில் சாதாரண மற்றும் அடர் நடவு சாகுபடித் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில் மா, கொய்யா மற்றும் மாதுளையிலுள்ள உயர் விளைச்சல் ரகங்கள், மாவில் ஒட்டுக்கட்டும் முறைகளை பயன்படுத்தி கன்றுகள் உற்பத்தி செய்தல், பனிப்புகை அறை அமைத்தல், நிழல்வலைக் கூடாரம் அமைத்தல் மேலும் பெரிய மரங்களில் கவாத்து செய்வதற்குரிய பருவம், கவாத்து செய்யும் முறைகள், மாதுளையில் ஒட்டுக்கட்டும் முறைகள், கொய்யா சாகுபடி முறைகள் மண்வளம் மற்றும் தட்ப வெப்பநிலை நடவுப் பருவம், சாதாரண மற்றும் அடர் நடவு சாகுபடித் தொழில்நுட்பங்கள நீர்ப்பாசனம், நீர்வழி உரமளித்தல், நீர் நிர்வாகம் பேருட்ட மற்றும் நுண்ணுடட்ட உர மேலாண்மை, களை மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 5ம் தேதி அன்று காலை 9 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!