Marathon flow in Perambalur

செப்டம்பர் 29ந்தேதி உலக இதய தினத்தையொட்டி பொது மக்களிடையே இதயத்தின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனங்களின் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது.

5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர் தூரம் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், பொது மக்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் 21 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் இடத்தை கன்னியாகுமரியை சேர்ந்த சி.மணிகண்டன் என்பவரும், 10 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும்,

பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த கீதா என்பவரும், 5 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை கோவையை சேர்ந்த ரவிக்குமார் என்பவரும், பெண்கள் பிரிவில் தூத்துக்குயை சேர்ந்த ஜெயமாலினி எனபவரும் பிடித்து வெற்றி பெற்றனர்.

21 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு 75 ஆயிரம் ரூபாயும், 10 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், 5 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 3 லட்சத்து 10 ஆயிரம் ருபாய் ரொக்க பணம் பரிசுத்தொகையாக வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!