Marxist Communist Party of India Perambalur Circular Elector Prakasan First Conference
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் வட்ட மின் அரங்க பிராக்ஷன் பேரவை முதல் மாநாடு பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மூத்த உறுப்பினர் புஷ்பராஜ் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்டக்குழு ஆர்.இராஜகுமாரன் அனைவரையும் வரவேற்றார். கே.கண்ணன் அறிக்கை சமர்ப்பித்தார். சி.சங்கா; அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றினார்.
வட்ட கன்வினர் எஸ்அகஸ்டின் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அழகர்சாமி நிறைவுரையாற்றினார்.
உயிரை பணயம் வைத்து உழைக்கும் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் கால தாமதம் செய்யாமல் 1.12.2015 முதல் உள்ள நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும், மின் விநியோக வட்டங்களில் கே 2,சிட் அக்ரிமெண்ட் முறையில் விதிகளை தளர்த்தி ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும், மின்துறையை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர், இடைக்கமிட்டி செயலாளராக எஸ்.அகஸ்டின் மற்றும் ஆர்.இராஜகுமாரன், வி.தமிழ்செல்வன், கே.கண்ணன், கே.குமாரசாமி, ஆர்.கண்ணன், டி.ஆறுமுகம் ஆகிய ஏழு போ; புதிய நிh;வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் கே.குமாரசாமி நன்றி கூறினார்.