measles, rubella vaccine : For children between the ages of 9 to 15 months

பெரம்பலூர், பிப்.4- தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 06.02.2017 முதல் 28.02.2017 வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட உள்ளது.

இம்முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 503 பள்ளிகளிலும் 490 அங்கன்வாடி மையங்களிலும் மற்றும் 90 துணை சுகாதார நிலையங்களிலும் நடைபெற உள்ளது. இதில் 9 மாதம் முதல் 5 வயது வரை உள்ள 35,026 குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 15 வயது வரை உள்ள 99,857 குழந்தைகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் (அரசு மற்றும் தனியார்) வழங்கப்பட உள்ளது. ஒரே சமயத்தில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியினை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்குவதால் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதோடு நோய் பரவுவதையும் தடுக்க முடியும்.

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. ஒரே தடுப்பூசியில் இரண்டு உயிர்க்கொல்லி நோய்களான தட்டம்மை மற்றும் ரூபெல்லாவிலிருந்து வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பதை தடுக்கிறது.

இந்த தடுப்பூசி ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் 10-18 மாத குழந்தைகளுக்கு MMR என்ற பெயரில் 1971ல் இருந்து போடப்பட்டு வருகிறது. இப்போது தமிழக அரசு இந்த தடுப்பூசியை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் தங்களது குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியினை போட்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இம்முகாமில் 4500-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இது தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு Toll Free No.104, 108 தொடர்புகொண்டு பயன்பெறலாம், என தமிழ்நாடு அரசு தரப்பபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!