Medical treatment camp for mentally retarded children on behalf of Perambalur Aruputha Hospital!

பெரம்பலூரில் செயல்பட்டு வரும் அற்புதா மருத்துவமனை, பேராயர் பால்ராஜ் அறக்கட்டளை மற்றும் குட் சமாரியன் சார்பில், திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள ஸ்பாஸ்டிக் சொசைட்டியைப் பார்வையிட்டு அங்கு பெருமூளை வாதம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய சுமார் 30 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
முகாமில், குழந்தைகளுக்கு ஆலோசனைகள், மருத்துவ உதவிகள், மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும், குழந்தைகள் ஆரோக்கியம் குறித்தும், அற்புதா மருத்துவமனை நிறுவனரும், மருத்துவ இயக்குநருமான டாக்டர் சாமுவேல் தேவக்குமார் குழந்தைகளுடன் உரையாடி ஆதரவான வார்த்தைகளை பேசி அவர்களை மகிழ்வித்தார். குழந்தைகள் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்தனர். அற்புதா மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் யோகேஷ் மற்றும் இல்ல நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497