Meeting with the people of CPM campaign
பெரம்பலூர் : தமிழகத்தில் அதிமுக திமுக அதிகாரப்போட்டி நடத்துவதை கண்டித்தும் பின்வாசல் வழியாக வரநினைக்கும் பாரதீய ஜனதா கட்சியை விமர்சித்தும் கண்டுகொள்ளப்படாத மக்கள் பிரச்சனைகளை முன் வைத்தும் தமிழகம் முழுவதும் மார்ச் 2 முதல் 6 ஆம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்த அறிவிப்பை தொடர்ந்து 3.3.2017 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
பெருமத்தூரில் துவங்கிய பிரச்சார இயக்கத்திற்கு மாவட்டக்குழு ஜெய்சங்கர் வட்டக்குழு ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். பின்னர் சர்க்கரை ஆலை எறையூர்ல் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாவட்ட செயற்குழு அழகர்சாமி கொடியேற்றி துவக்கி வைத்தார்.
அனுக்கூரில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு எ.கலையரசி வட்ட செயலாளர் சுபா.தங்கராசு முன்னிலை வகித்தனர். பின்னர் பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் காந்திசிலை முன் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு என்.செல்லதுரை முன்னிலை வகித்தார். பிரச்சாரத்தில் மாநிலசெயற்குழு உறுப்பினரும் முன்னான் எம்எல்ஏவுமான எ.லாசர் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு எஸ்.ஸ்ரீதர், எம்.சின்னதுரை, மாலதி சிட்டிபாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் மாவட்ட செயற்குழு பி.ரமேஷ், எஸ்.அகஸ்டின், எ.கணேசன்,இராஜகுமாரன், வாலிபர் சஙகம் எஸ்.பி.டி.ராஜாங்கம், பி.கிருஷ்ணசாமி, பிமுத்துசாமி மற்றும் ஆட்டோ சங்க பொருப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.