Memms Competition on AIDS Disease Awareness : Namakkal Collector
தமிழகநாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் முலம் எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீம்ஸ் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் எச்.ஐ.வி, எய்ட்ஸ், பால்வினை நோய், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியம், ஒதுக்குதல், புறக்கணித்தல் இல்லாமை, ரத்ததானம் மற்றும் பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வு குறித்து மீம்ஸ் போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டி அக்டோபர் 1 முதல் நவம்பர் 25 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் போட்டிக்கு தொடர்பு இல்லாத செய்தி சினிமா நடிகைகளின் அசல் படம், அரசியல்வாதிகள் மற்றும் கொடி, சின்னம், தனிநபர் விமர்சனம், விலங்குகளின் படம், ஆபாசமான படங்கள், திரைப்படவசனங்கள் மற்றும் மற்றவர்களுடைய கருத்தை அப்படியே பயன்படுத்தாமல் மீம்ஸ் தயார் செய்து எமீம்எடே.டிஎன்சாக்ஸ் அட் ஜிமெயில்.காம் என்ற இ-மெயில் முகவரிக்கு உங்கள் புகைப்படத்தினையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய விபரம் மற்றும் பரிசுத்தொகை வரும் டிச.1 உலக எய்ட்ஸ் தினத்தன்று அறிவிக்கப்படும் மேலும் விபரங்களுக்கு டிஎன்சாக்ஸ்.இன் என்ற வெப்சைட் முகவரியில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.