Meningitis Awareness Training Camp on Kapilarmalai near Namakkal
நாமக்கல் அருகே உள்ள கபிலர்மலையில், மூளைக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட கபிலர்லை வட்டார வளமையத்திற்குட்பட்ட பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வட்டார அளவிலான மூளைக்காய்ச்சல் குறித்த விழிப்புணவு பயிற்சி 2 நாட்கள் நடைபெற்றது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) தமிழரசி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஐஇ ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். அரசு டாக்டர்கள் சித்தார்த்தன், சரண்யா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூளைக் காய்ச்சல் பரவும் விதம் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் குறித்து விளக்கி கூறினார்கள்.
மேலும், மூளைக் காய்ச்சல் பரவுதல் மூலம் எவ்வாறு மனவளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது என்று மாற்றுத்திறன் மாணவர்களின் சிறப்பாசிரியர்கள் சரஸ்வதி மற்றும் அருள்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இயன்முறை மருத்துவர் விஜயபிரியா மூளை முடக்கு வாதம் குறித்த பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியில் வட்டார பள்ளி ஆயத்த முகாம் பெற்றோர்கள், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆயத்த முகாம் பாதுகாவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர். வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் பயிற்சியை பார்வையிட்டு கருத்துரைகள் வழங்கினார்.