MGR Birthday: 1200 families in neykuppai dhoti, saree, was presented on behalf of the AIADMK
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் நெய்குப்பையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். ஊராட்சி கழக செயலாளர் விக்னேஷ் வரவேற்று பேசினார்.
தலைமை கழக செயலாளர் சுறுசுறுப்பு சுப்பையா, மாநில மீனவர் பிரிவு இணை செயலாளர் தேவராசன், மாவட்ட அவைத்தலைவர் துரை, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாவட்ட இணை செயலாளர் ராணி, ஒன்றிய இணை செயலாளர் பெரியம்மாள்நீலன் மற்றும் பலர் பேசினார்கள். தொடர்ந்து மாவட்ட அதிமுக சார்பில் 110 விதவை பெண்களுக்கு சில்வர் குடமும், கிராமத்தில் உள்ள ஆயிரத்து 200 குடும்பங்களுக்கும் வேட்டி சேலை இலவசமாக வழங்கப்பட்டது.
இதில் திரளான அ.தி.மு.க வினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.முடிவில் கிளை செயலாளர் விஜயபாரதி நன்றி கூறினார். ஒரு நேரத்தில் நலத்திட்ட உதவிகளை பெற ஆயிரத்து இரு நூறு குடும்பத்தினரும் ஒரே நேரத்தில் பெற விரும்பினால் தள்ளு முள்ளு ஏற்பட்டு விடுவதோடு வயதானர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பார்கள் என்பதால் முன்கூட்டியே டோக்கன் வழங்கப்ட்டு அனைவருக்கும் கிடைக்கும் வகைகள் அக்கட்சியினர் முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளனர்.