MGR Century Festival: Employment Camp in Perambalur
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, விடுத்துள்ள தகவல் :
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து வரும் ஆக.29 அன்று பெரம்பலூர் – துறையூர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழிலாளா; நலத்துறை மூலம் சென்னை, திருச்சி, திருப்பூர், திருவள்ளூர் போன்ற பெருநகரங்களில் உள்ள எம்.பி.எம் டெக்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட், மகேந்திரா கார் டீலர்சிப், ஐ.சி.ஐ.சி.ஐ அகாடமி, எம்.ஆர், எப் லிமிடெட், கிளாசிக்போலோ, டிவிஎஸ் டெய்னிங், எல்.ஐ.சி நிறுவனம், க்ளொ டெக்ஸ்ட், ஏபிடி மாருதி, ஓம் விநாயகா, டீ எக்ஸ்போர்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, பொறியியல், இளங்கலை மற்றும் முதுகலை போன்ற கல்வித் தகுதிகள் உடைய 18 முதல் 35 வரை உள்ள ஆண் – பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், குடும்ப அட்டையின் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் வருகை தந்து பயன்பெறலாம்.