MGR Samadhi near of Late Chief Minister Jayalalithaa’s body and buried it
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் தற்போது சென்னை மெரீனா வில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே செய்யப்பட்டது.
பீரங்கி வண்டியில் ஜெயலலிதாவின் பூத உடல் ஏற்றப்பட்டு அண்ணாசாலை, வாலஜா சாலை வழியாக மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கு வைத்து அவரின் பூத உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பன்னீர் செல்வம், தம்பிதுரை, சபாநாயகர் தனபால், ஆகியோரும் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு, மத்தி அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் துணைதலைவர் ராகுல்காந்தி,மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் முன்னாள் தமிழக ஆளுனர் ரோசையாவும் இறுதி மரியாதை செய்தனர்.
பின்னர் அவர் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி எடுத்து சசிகலாவிடம் கொடுக்கப்பட்டது.தொடர்ந்து அதிமுக கொடி போர்த்தப்பட்டது. பின்னர் வைணவ முறைப்படி இறுதி சடங்குகள் நடந்தன. சசிகலா அவருக்கு இறுதி சடங்குகள் செய்தார். தொடரந்து சந்தன பேழையில் வைக்கப்பட்டிருந்த உடல் எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.