MGR’s centenary celebration: the perambalur collector consult in staffs

பெரம்பலூர் : தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தலைமையின் கீழ் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவை மாவட்டங்கள் தோறும் சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில் இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழா தொடர்ந்து நடைபெறும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பெரம்பலூரில் மாவட்டத்தில் வரும் ஆக. 5 அன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் .எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்தாகவ தெரிவிக்கப்பட்டள்ளது.

இதனை முன்னிட்டு நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடானான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு மாவட்ட அளவிலான குழுக்களை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டக் குழுவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் தலைவராகவும், பெம்பலூர் மாவட்ட நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காவலர்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், நகராட்சி ஆணையர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோரை குழுவின் உறுப்பினர்களாகவும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து அரசு துறைகளின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அதிகளவில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் முதன்மைக்கல்வி அலுவலரும், கல்லூரிக் கல்வித் துறையின் சார்பில் கல்லூரிக் கல்வித்துறை இணை இயக்குநரும்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை, பெருமைகளை விளக்கும் வகையில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட கலை,இலக்கியப்போட்டிகள் நடத்திட வேண்டும்.

ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வனத் துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகள் எம்.ஜி.ஆரின் சாதனைகளை, பெருமைகளை பொதுமக்களிடம் விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகளை தயார் செய்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயணம் செய்து எம்.ஜி.ஆர் குறித்த துண்டுபிரசுரங்களையும் மக்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சிறப்பு புகைப்படக்கண்காட்சிகள் மற்றும் வீடியோப் படக்காட்சிகள் நடத்தவேண்டும்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்திட வேண்டும்.
தனிநபர் போட்டிகள், குழுப் போட்டிகள் மற்றும் மாரத்தான் போன்ற பெருந்திரளான பொதுமக்களை கொண்டு நடத்தப்படும் போட்டிகளை நடத்திடவேண்டும்.

சுதாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்களும், இரத்ததான முகாம்களும் நடத்தவேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பிலும் சிறப்பு முகாம்கள் நடத்திடவேண்டும்.

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் விழா சிறப்பாக அமையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் செயல்படவேண்டும், என ஆட்சியர் தெரிவித்தார்.
அரசு பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!