Mini buses are allowed to drive on the route, the public demands

model


அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மினி பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு மினி பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், கிராமங்களை பெரும்பான்மையாக கொண்டுள்ளது, கடந்த திமுக ஆட்சியில் கிரமப்புற மக்களின் வசதிக்காக மினி பேருந்துகள் இயக்க உரிமம் வழங்கி இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் மினிபேருந்துகள் அதிக லாபம் பெறவேண்டும் என்கிற நோக்கத்தில் அனுமதிக்கபட்ட வழித்தடத்தில் இயக்குவதற்கு பதிலாக விருப்பத்திற்கேற்றார் போல் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் மினிபேருந்துகள் அனுமதிக்கப்ட்ட வழித்தடத்தில் உரிய கிராமங்களுக்கு செல்லாமல் நகர்ப்புற மற்றும் நெடுஞ்சாலைகள் வழியாக இயங்குகின்றன. இதனால், மாணவ மாணவியர்கள், வேலைக்கு செல்வோர், நோயாளிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

பல்முறை மக்களுகம், மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். இதே போன்று ஆட்டோக்களும் இயக்கபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!