Minorities should upgrade basic infrastructure in educational institutions – Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ.அழகிரிசாமி விடுத்துள்ள தகவல்:

கல்வியில் பின்தங்கிய சிறுபான்மையின மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வண்ணம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் “Infrastructure Development for Minority Institutions (IDMI)” என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உட்கட்டமைப்பு வசதிகளான வகுப்பறை, அறிவியல்கூடம், கணினி அறை, நூலகம், கழிப்பறை, குடிநீர்; வசதிகள், விடுதிகள் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்தும் திட்ட மதிப்பீட்டு தொகையில் 75 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 இலட்சம் இதில் எது குறைந்ததோ அத்தொகை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

உதவிப்பெறுவதற்கான தகுதிகள்: அரசு உதவி பெறும்; உதவிபெறாத சிறுபான்மையினரின் பள்ளிகள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இயங்கி மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு www.mhrd.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

மேற்படி திட்டத்தில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்பி பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!