Minority people should create a separate department, resolution in Perambalur.

பெரம்பலூர் : தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பெரம்பலூர் மாவட்ட முதல் மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார்.

ஆ.ராமர் வரவேற்றார். கமிட்டி உறுப்பினர்கள் இ.தாஹீர்பாஷா, எ.சவுரிராஜன், எ.பல்கீஸ், தேவன்பு, பன்னீர்செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து சிறப்புரை ஆற்றினார்.

தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை பொருளாளர் ப.சந்தனதுரை, மக்கள் உரிமை பொதுமேடை ஒருங்கினைப்பாளர், சு.அசன்முகமது, சத்திய சிந்தனை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முபாரக்அலி, கத்தோலிக்க சங்க செயலாளர் அகரம் திரவியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும், தேவாலயங்கள், மற்றும் மசூதிகள் கட்ட கொடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு காலம் தாழ்த்தாமல் அனுமதி வழங்க வேண்டும்.

கபாஸ்தான் கல்லறைத்தோட்டங்களுக்கு நிலம் வழங்கவேண்டும், சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தவறாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், சிறுதொழில் மற்றும் வணிகக்கடன்களை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களுக்கென்று தனித்துறையை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும், பொதுஇடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் மதசார்பின்மையை உறுத் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் மாவட்ட செயற்குழு ஆர்.அழகர்சாமி, பி.ரமேஷ் மற்றும் எ.கணேசன், எம்.கருணாநிதி, பி.முத்துசாமி, பி.கிருஷ்ணசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏவால்மேரி நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!