MLA R. Tamilselvan launched the Bhoomi Puja for the office at a cost of Rs 28.32 lakh near Perambalur.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்டபட்ட சாஸ்திரிபுரத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.28.32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள தார் சாலைகளுக்கான பூமி பூஜை நேற்று திட்ட இயக்குநர் ஸ்ரீதர் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.
மலையாளப்பட்டி முதல் சாஸ்திரிபுரம் சாலையை இணைக்கும் வகையில் 1.7கி.மீ. தொலைவுள்ள சாலை ரூ.28.32 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. இத்தார்ச்சாலை அமைவதன் மூலம் மலையாளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இச்சாலைப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்புடைய அலுவலர்களுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் என். சிவப்பிரகாசம், அதிமுக கட்சியினர் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.