MLA, R.Tamilselvan Party thanked the Perambalur voters throughout the municipality.
எம்.எல்.ஏ., இரா.தமிழ்ச்செல்வன் கட்சியினருடன் பெரம்பலூர் நகராட்சி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் நேற்றும், இன்றும் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை, கல்யாண் நகர், சமத்துவபுரம், வடக்கு மாதவி சாலை, எளம்பலூர் சாலை, வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், துறைமங்கலம், உள்ளிட்ட 21 வார்டு பகுதிகளிலும், அதிமுக கட்சியினருடன், வீதி வீதியாக சென்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வாக்களித்து 6 வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதாவை முதலமைச்சராக்கியதற்கும், தன்னை சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெறச் செய்ததற்கும் நன்றி தெரிவித்தார்.
பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, வக்கீல் கணேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.